Home » Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 25
Gen Z தொடர்கள்

Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 25

என்னோடு புறப்படுங்கள் 

அம்மாவுடைய சில்க் துப்பட்டாவை பெல்ட்டாக உருமாற்றியிருந்தாள் அனன்யா. யூட்யூப் வீடியோக்களைப் பார்த்து, முறுக்கி நிறமேற்றப்பட்ட க்ராப் ஷர்ட்டும் பெரிய பாக்கெட் வைத்த கார்கோ பேண்ட்டும் அணிந்திருந்தாள். கால்களில் பெரிய வெள்ளை ஸ்நீக்கர் ஷூ. இந்த மூன்றின் விலையும் மூவாயிரம் ரூபாய்க்குள்தான். ஆனால் OOTDஇல் இந்த உடையலங்காரம் ஐந்நூறு விருப்பக்குறிகளைப் பெற்றது.

*

விலை, குடும்ப வழக்கம், அருகில் கிடைப்பவை, இவற்றையெல்லாம் வைத்துத்தான் முந்தைய தலைமுறையினர் உடைகளைத் தேர்வு செய்தனர். ஆனால் தம் நம்பிக்கையை, எண்ண ஓட்டங்களை அடையாளப்படுத்தும் விதமாக உடைகள் இருக்க வேண்டுமென விரும்புகின்றனர் ஜென் ஸீ தலைமுறையினர். மலிவு விலை முதல் விலையுயர்ந்த ஆடைகள் வரை, சர்வதேச ஃபேஷனில் தொடங்கி பாரம்பரிய உடைகள் வரை எல்லாவிதமான டிரெண்டுகளையும் முயன்று பார்க்க விழைகின்றனர்.

இவர்களுடைய பொதுவான உடையலங்காரம் குறித்தும், பின்பற்றும் ஃபேஷன் போக்குகள் குறித்தும் சுருக்கமாகப் பார்க்கலாம்.

திரைப்படங்களையும், நடிகர்களையும் பார்த்து உடையலங்காரம் செய்துகொள்வது முன்னர் வழக்கமாக இருந்தது. உதாரணங்கள்: நதியா கொண்டை, ஜோதிகா க்ளிப், சந்திரமுகியில் நயன்தாரா கட்டிய புடைவைகள். இப்போது திரைப்படங்களின் இடத்தைச் சமூக வலைத்தளங்களும், நடிகர்களின் இடத்தை இன்ஃப்ளூயன்ஸர்களும் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். பத்தாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை பின்தொடர்பவர்களைக் கொண்ட இளம் இன்ஃப்ளூயன்ஸர்கள், பிரபலமான ஃபேஷன் ஐகான்களைக் காட்டிலும் ஜென் ஸீ தலைமுறையிடம் அதிகச் செல்வாக்கு கொண்டிருக்கின்றனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!