Home » Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 30
Gen Z தொடர்கள்

Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 30

ஜென் ஆல்ஃபா

உறவினரது மகனுக்கு ஐதராபாத்தில் வேலை கிடைத்தது. இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். அவர்களுக்கு ஒரே மகன். கொஞ்சம் வளர்ந்ததும் அவனுக்குத் தனியறை வேண்டும் என்பதற்காகவே மூன்று படுக்கையறை கொண்ட வீடாகப் பார்த்து வாடகைக்குச் சென்றனர்.

படிக்கையில் கல்லூரி விடுதியில் சேர்த்துவிட்டபோது இரண்டு மாதங்களில் திரும்பி வந்துவிட்டான். இரவில் விளக்கைப் போடுகின்றனர், அலமாரியைக் கலைக்கின்றனர், கழிவறையைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவில்லை என ஏகப்பட்ட காரணங்கள். பிறகு தினமும் ஒன்றரை மணி நேரம் கல்லூரிப் பேருந்தில் பிரயாணம் செய்து போய்வந்தான்.

ஐதராபாதில் அவனுக்கு வீடு பார்த்துக் குடியமர்த்தி வைப்பதற்காகச் சென்றனர். மூன்று பேர், நான்கு பேர் பகிர்ந்துகொள்ளும் அறைகள் அங்கு ஏராளமாக இருக்கின்றன. ஆனால் மகன் தனியறைதான் வேண்டுமென்றான். தனியறைகளின் வாடகை அவனுடைய சம்பளத்தில் முக்கால் பாகம் இருந்தது. மேலதிகச் செலவுகளுக்குப் பெற்றோர்தான் பணம் அனுப்ப வேண்டும். புறநகர்ப் பகுதியில் பார்க்கலாமென்றால், அவனுக்குக் காலையில் சீக்கிரம் எழுந்து தானாகக் கிளம்ப முடியாது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!