ஊத்துக்குளி வெண்ணெய், காரைக்குடி கண்டாங்கி, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்று அடிக்கடி புழங்கக் கூடிய உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். ஏன் இவற்றை ஊர்ப் பெயரோடு சேர்த்துச் சொல்கிறோம்? வெண்ணெய் நம் வீட்டில் கூடத்தானே எடுப்போம்.? எல்லாப் பொருட்களும் எல்லா இடங்களிலும் தானே கிடைக்கின்றன?
திருமணம் என்ற பெயரில் ஒருவருக்கு மட்டுமே சொந்தமான ஒரு இடத்தை ஒரு பெண் அடைந்துவிடுவாள். அதன்பிறகு பெயருக்குப் பின்னால் கணவர் பெயர் ஒட்டிக் கொள்ளும் அல்லவா? அதைப் போல் தான் இதுவும். சரி. திருமணம் சட்டப்படியானது. அதனால் ஒட்டிக் கொண்டிருக்கிறது. மேற்கண்டவைகளை இப்படித்தான் சொல்ல வேண்டும் என்பதற்குச் சட்டம் இருக்கிறதா என்றால் இருக்கிறது. அவர்கள் சட்டப்படிதான் அங்கீகாரம் வாங்கி இருக்கிறார்கள்.
Add Comment