கேய்ஸன் (kaizen) என்கிற ஒரு ஜப்பானிய வார்த்தைக்கோவை மேலாண்மைப் பாடங்களில் மிகப்பிரசித்தமானது. தொடர்ந்த முன்னேற்றம் (continuous improvement) என்பது அதன் மறைபொருள். எந்தச் செயலாயினும், உற்பத்தியாயினும், இலக்காயினும் அதனைத் தொடர்ச்சியான மேம்படுத்தல்களின் மூலம் சிறப்புறச் செய்துகொண்டே இருப்பது பிரதானமானது என்பதை வலியுறுத்தும் காரணப்பெயர் அது.
அது மனிதர்களுக்கு மட்டும்தானா? இல்லை… ரோபாட்டுகளுக்கும் அது பொருந்தட்டுமே என்று ஒரு புதிய வழிமுறையுடன் இறங்கியிருக்கின்றன கூகுளும் டீப்மைண்டும். சுந்தர் பிச்சை இந்த வாரம் ரோபோ கேட் (RoboCat) என்கிற புதிய ஆராய்ச்சியில் கூகுள் டீப்மைண்ட் இறங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் துறையில், கூகுள் டீப்மைண்ட் ஒரு முன்னேராக, பிரத்யேக முயற்சிகளைச் செயல்படுத்தித் தனித்து நிற்கிறது. தொடர்ந்து சாத்தியங்களின் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டே செல்கிறது. இப்போது அவர்கள் அறிவித்திருக்கும் “RoboCat” ஆராய்ச்சி அத்தகைய முன்னோடி முயற்சியாகவே கருதப்படுகிறது.
Add Comment