கடந்த பத்தாண்டுகளில் கூட முன்பின் தெரியாத இடத்துக்கு, முதல் முறையாகச் செல்லும்போது ‘பயந்த தனிவழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே’ என்று கந்தரலங்காரத்தை மனத்துக்குள் சொல்லிக்கொண்டு, அட்ரஸை துண்டுச்சீட்டில் எழுதி வைத்துக்கொண்டு வீடு வீடாகக் கேட்டுச்சென்று கொண்டிருந்தோம். அந்த நிலையை மாற்றியது ஜி.பி.எஸ். எனும் கையடக்க வழிகாட்டி.
GPS என்பது இப்போது எளியவர்களும் சுலபமாகப் பயன்படுத்தும் வார்த்தையாகவும், நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் இன்றியமையாததோர் அம்சமாகவும் மாறியிருக்கிறது.
ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குச் செல்லும் வழிகாட்டியாகவும். ஓலா, ஊபர் போன்ற வாடகை ஊர்திகளை அமர்த்தவும், செல்லும் வழியை அறிவுறுத்தும் கருவியாகவும், பயணத் தூரங்களை திட்டமிட உதவும் எளிய நண்பனாகவும், உணவு, அத்தியாவசியப் பொருள்கள் டெலிவரி நேரத்தை கண்டுணரும் காட்டியாகவும், பல விதங்களில் நம் வாழ்க்கையைத் தன் தொழில் நுட்பத்தால் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.
i think it is qualcomm sir..or is there any other company name qualcam