மல்யுத்தம் என்பது ஆயுதங்கள் எதையும் பயன்படுத்தாது தங்கள் பலத்தை மட்டுமே பயன்படுத்தி இருவர் போரிடுவது. இதிகாசங்களிலேயே மல்யுத்தம் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக மகாபாரதத்தில் பீமன், துரியோதனன் போன்றவர்கள் சிறந்த மல்யுத்த வீரர்கள். போரிடுவதற்கு மட்டுமல்லாது மல்யுத்தம் நீண்டகாலமாக ஒரு வீர விளையாட்டாகவும் இருந்திருக்கிறது.
இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல பாகங்களிலும் மல்யுத்தம் பல்வேறு வடிவங்களில் வீர விளையாட்டாக மக்களால் பின்பற்றப்பட்டுள்ளது. உதாரணமாக, பண்டைய காலத்துக் கிரேக்க ஒலிம்பிக் போட்டிகளிலும் மல்யுத்தம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்கால நவீன ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்த 1896ஆம் ஆண்டிலிருந்து மல்யுத்தம் ஒலிம்பிக்கின் அங்கமாக இருந்துள்ளது.
இந்த வகையில் ஜப்பானியர்களின் மல்யுத்தக் கலை தனித்துவமானது. அதனை சுமோ என்று சொல்வார்கள். சுமோ மல்யுத்தத்தில் ஈடுபடும் வீரர்கள் ரிகிஷி என அழைக்கப்படுகிறார்கள். ஒருவர் ரிகிஷி ஆக வேண்டுமானால் அவர் தனது பதின்ம வயதிலேயே அந்த முடிவை எடுத்து, சுமோவுக்காகத் தன் வாழ்வை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும்.














Add Comment