உலகின் சிறந்த ஏழு கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார் இந்திய விஞ்ஞானி குருதேஜ் சிங் சாந்து. செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் அவரது கண்டுபிடிப்புகள் 1,382 அமெரிக்கக் காப்புரிமைகளை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளன. அமெரிக்காவில் அதிகமான காப்புரிமைகளைப் பதிவு செய்து வைத்திருந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்குப் பிறகு அந்தச் சாதனையைச் சத்தமின்றி முறியடித்திருக்கிறார் குருதேஜ் சிங் சாந்து.
சாந்து, தொழில்நுட்பத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க ஆண்ட்ரு எஸ் குரோவ் விருது பெற்ற ஒரே இந்தியர். முப்பது ஆண்டுகளாக அமெரிக்காவின் ஐடஹோ மாகாணத்திலுள்ள போயஸ் நகரத்தில் வசிக்கிறார். தற்போது மைக்ரான் டெக்னலாஜி நிறுவனத்தில் இயக்குநராகவும், மூத்த உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.
குருதேஜ் சிங்கின் குடும்பம் கல்விப் பின்னணி கொண்டது. இவருடைய தந்தை பேராசிரியர் எஸ்.எஸ். சாந்து, லண்டனில் பணிபுரிந்தபோது குருதேஜ் சிங் பிறந்தார். பின்னர் பஞ்சாப் மாநிலம் அம்ரித்ஸரில் உள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் எஸ்.எஸ். சாந்துவுக்குப் பேராசிரியர் பணி கிடைத்தது. இதனால் சாந்துவின் குடும்பம் அம்ரித்ஸருக்குக் குடிபெயர்ந்தது.














Add Comment