நியூசிலாந்து சென்ற வாரம் இரு சம்பவங்களால் உலக கவனத்தை ஈர்த்தது. ஒன்று அதன் பிரதமர் நாடாளுமன்றத்தில் இரண்டு லட்சம் மக்களிடம் மன்னிப்பு கோரினார். அந்நாட்டு அரசாங்கம் செய்த வரலாற்றுக் குற்றத்திற்காக. மற்றொன்று மவோரி மக்களின் உரிமையை நிலைநாட்டும் வைத்தாங்கி ஒப்பந்தத்தை அழிக்கும் மசோதாவை எதிர்த்து அரங்கேறிய ஹக்கா நடனம்.
நியூசிலாந்து பழங்குடியினர் உரிமைகளில் முன்னணி நாடாக அறியப்படும் ஒன்று. கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள், அங்கே மாவொரி பழங்குடியினர்கள் தான். மாவொரி மக்கள் ஆயிரம் வருடத்திற்கு முன் நியூசிலாந்துக்குத் தஞ்சம் அடைந்தவர்கள். தங்களுக்கென்று ஒரு மொழி, கலாச்சாரத்துடன் வாழ்ந்துகொண்டிருந்தனர். ஐரோப்பியர்கள், பிரிட்டிஷ் என்று பல்வேறு காலனிகள் வந்தாலும், இன்றும் அதே கலாச்சாரத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பது அவர்களின் சிறப்பு.
இந்தியா சுதந்திரம் பெற்ற அதே வருடம் தான் நியூசிலாந்தும் முழுமையாகச் சுதந்திரம் பெற்றது. ஆனால் இந்தியா போல், சுதந்திரம் முடிந்த கையுடன் ஆங்கிலேயர்கள் மூட்டையைக் கட்டிக்கொண்டு ஊர் திரும்பவில்லை. அப்படியே தங்கிவிட்டனர். அதனால் நியூசிலாந்தில் காகேஷியன்ஸ் எண்பது சதவீதம் உள்ளனர்.
Add Comment