“இது பழைய நகை. ஹால்மார்க் முத்திரை இல்லை. இன்னைக்கு ரேட்டுக்கு யாரும் வாங்கமாட்டாங்க. பாதி விலைக்குத்தான் வாங்குவோம்.”
பழைய தங்க நகைகளை மாற்றிப் புதிய தங்க நகைகளை வாங்க அல்லது பழைய தங்க நகைகளை விற்க நகைக் கடையை அணுகினால் தொண்ணூறு சதவிகித கடைக்காரர்கள் இப்படித்தான் சொல்வார்கள்.
பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை என்பது என்ன?
உண்மையில் பழைய தங்க நகைகள் மற்றும் தங்கக் காசுகளுக்கு இன்றைய தங்கத்தின் பாதி விலைதான் மதிப்பா? பழைய தங்க நகைகள் அதிக உலோகம் கலக்கப்பட்டனவா? எங்களுடைய இந்தப் பழைய தங்கநகைகள் சரியான அளவில் உலோகம் கலக்கப்பட்ட சுத்தமான தங்கம். வேண்டுமானால் அந்த ஹால்மார்க்காரர்கள் சோதித்துப் பார்க்கட்டும். பொதுமக்கள் வைத்திருக்கும் பழைய தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பெற முடியாதா?
Add Comment