ஒரு காலத்தில் புகழுடனும், அதிகாரமிடுக்குடனும் திகழ்ந்த ஆசியாக் கண்டத்தின் அரசியல்வாதிகளின் கடைசிக்காலம் பெரும்பாலும் பரிதாபமானது. ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்’ என்ற திரை வசனத்திற்கு உயிரளித்துவிட்டுக் காணாமல் போய்விடுகிறார்கள் பலர். இந்தப் பட்டியலில் மிக அண்மையில் இணைந்து கொண்டவர் பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனா.
பங்களாதேஷ் மக்களின் முதலாவது எழுச்சி ஹசீனாவின் தந்தை ஷேய்க் முஜீபுர் ரஹ்மானுக்குக் கிரீடம் அணிவித்தது என்றால் அண்மையில் நடந்த இரண்டாவது மக்கள் புரட்சி, அல்லது மாணவர் எழுச்சி அவரது சிலையை உடைத்து ஹசீனாவை நாட்டைவிட்டே துரத்தியிருக்கிறது. ஒன்றரைத் தசாப்தங்களாக பங்களாதேஷின் அடையாளமாய் இருந்த ஹசீனா இன்று இந்தியாவில் அரசியல் தஞ்சம் கோரி இருக்கும் மாண்புமிகு அகதி.
‘என்றைக்குமே நான், எல்லாமே நான்’ என்று வாழும் ஒரு அரசியல்வாதியின் திடீர் வெற்றிடம் ஏற்படுத்தும் தாக்கம் ஒரு தேசத்திற்கு, அவ்வரசியல்வாதியின் கட்சிக்கு ஏற்படுத்தும் கொடூரத் தாக்கம் சொல்லி மாளாது. ஜெயலலிதாவின் இறப்பின் பின்னரான அ.தி.மு.க இருந்த சுவடே தெரியாமல் அழிந்து கொண்டிருப்பது சமகாலச் சாட்சி.
Add Comment