ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் கடந்த வாரம் வந்த வெப்ப அலையினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பிரிட்டனும் இதற்கு விதிவிலக்கல்ல. ஜூலை 18, 19 ஆகிய இரு தினங்களும் பிரிட்டனின் வெப்பநிலை மிக அதிகமாக இருந்தது.
பிரிட்டன் வரலாற்றில் முதல் தடவையாக வெப்ப நிலை 40°C எல்லையைத் தாண்டியது. இங்கிலாந்தில் கொனிங்ஸ்பி (Coningsby) எனுமிடத்தில் ஜூலை 19 அன்று 40.3°C அதிகூடிய வெப்பநிலையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லண்டனிலும் சில இடங்களில் 40°C க்கு மேல் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் போது சில நாடுகளில் காட்டுத் தீ உருவாகுவதும் பரவுவதும் ஆண்டாண்டு தோறும் நடக்கும் நிகழ்வுகள் தான். ஆனாலும் இங்கிலாந்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் இல்லையென்றே சொல்லலாம். கடந்த வாரம் லண்டன் மாநகரத்தில் மட்டுமே பதினைந்து பெரிய தீ சம்பந்தமான சம்பவங்களும் மேலும் பல காட்டுத் தீ, புல்வெளிகளில் தீ போன்ற சம்பவங்களையும் கையாண்டதாக லண்டன் மாநகரத் தீயணைப்புப் படையினர் அறிவித்தார்கள்.
Add Comment