Home » 75
வரலாறு முக்கியம்

75

இந்தியாவின் 75வது சுதந்தர தினத்தை இவ்வாரம் கொண்டாடுகிறோம். பெருமிதம் மேலோங்கும் இத்தருணத்தில், இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு உதித்த தலைமுறை, இந்தச் சுதந்திரத்தை அடைவதற்கு நாம் தந்த விலையை, அனுபவித்த சிரமங்களை முழுதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை என்னும் எண்ணமும் எழாமல் இல்லை. அது நம் கல்வி முறையின் பிழை. இருக்கட்டும். இன்றைய தலைமுறையினருக்கு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றைச் சிறிது விளக்கிச் சொல்வோம்.

இந்திய சுதந்திரப் போரின் வரலாற்றைத் தெரிந்து வைத்துக் கொள்வது ஒவ்வொரு இந்தியனுக்கும் – தமிழனுக்கும் அவசியம். ஏனெனில் ஏதேனும் ஒரு காரணி – நிறம், மதம், இனம், சாதி போன்ற ஏதேனும் ஒன்று – காலந்தோறும் வெவ்வேறு நேரங்களில், வெவ்வேறு விதமாக நம்மை அடிமைப்படுத்த வந்து கொண்டேயிருக்கின்றன. அடிமைப்படுத்த வரும் சக்தியை அடித்து விரட்டத் தெரிந்துகொள்வது அவசியமல்லவா? இந்திய விடுதலைக்கு எத்தனை பேர் எத்தனை விதங்களில் பங்களித்திருக்கிறார்கள் என்பதை அறிதல் இதற்காகவே அவசியமாகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Bhuvaneswaran AS says:

    அருமையாக வரலாற்று படிமங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது. இன்றைய பிள்ளைகள், மாணவர்கள், இளைஞர்கள் அறியாத பல வரலாற்று, போர் மற்றும் நிர்வாகப் பக்கங்கள் இங்கு விவாதிக்கப்பட்டுள்ளன.

    சில பல விடுபட்டுப் போயிருந்தாலும்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!