104. மூன்று உண்மைகள்
கருவூராரின் பர்ணசாலையில் அவரை அன்றி வேறு யாருமில்லை. ஒருக்கால் தனது பிற மாணாக்கர்களுக்காக அவர் வேறோர் இடத்தில் கடிகை அமைத்திருக்கலாம் என்று சார்வாகன் நினைத்தான். அதையே சிறிது மாற்றி, இந்தக் குடில் தனக்காக மட்டுமே அவர் கட்டி வைத்ததாக இருக்கும் என்றும் எண்ணிக்கொண்டான். அப்படி நினைத்துக்கொள்வது அவனுக்கு மகிழ்ச்சியளித்ததைக் கண்டேன்.
அவன் இது குறித்துச் சித்தரிடம் கேட்கவும் செய்தான்.
உங்களுக்கு வேறு உறைவிடங்களும் உண்டா?
இல்லையே. ஏன் கேட்கிறாய்?
இங்கே யாருமில்லையே என்று கேட்டேன்.
யார் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாய்?
உங்கள் சீடர்கள்.











Add Comment