Home » விண்வெளித் தொழிலதிபர்
ஆளுமை

விண்வெளித் தொழிலதிபர்

அவைஸ் அகமது

கர்நாடகாவில் உள்ள சிக்மகளூரு மாவட்டத்தில் அல்டூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் அவைஸ் அகமது. எட்டாம் வகுப்பு வரை நவீனத் தொழில்நுட்பமோ, ஸ்மார்ட்ஃபோனோ, இணையமோ அவருக்குப் பரிச்சயமில்லை. புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் விண்வெளி மீது ஆர்வம் ஏற்பட்டது. அது அவரை இன்று 900 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கும், சர்வதேச விண்வெளி நிறுவனமான நாசாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் அளவுக்குக் கொண்டு சென்றுள்ளது.

இன்று விண்வெளியில் இருந்து பூமியை ஆய்வு செய்வதற்கான அதிநவீனச் செயற்கைக்கோள்களை உருவாக்கும் ‘ பிக்ஸல்’ (Pixxel) என்ற விண்வெளித் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இணை இயக்குநராக இருக்கிறார் அவைஸ் அகமது. கிராமத்து நூலகத்தில் தொடங்கிய ஆர்வம் அவரை விண்வெளியிலிருந்து பூமியை ஆய்வு செய்வது வரை அழைத்துச் சென்றுள்ளது.

இணையம், டிஜிட்டல் பொழுதுபோக்குகள் இல்லாத தொண்ணூறுகளில் பிறந்த குழந்தைகளின் ஆர்வம் புத்தகங்கள் வாசிப்பதாகத்தான் இருக்கும். அவைஸ் அகமதுவும் பெரும்பாலான நேரங்களைப் பள்ளி நூலகத்தில் செலவிட்டுள்ளார். விண்வெளி சம்பந்தமான புத்தகங்களை அதிகமாக வாசித்துள்ளார். அவரது ஆர்வத்தைக் கண்ட தந்தை அவருக்குப் பால்வெளி, கோள்கள், விண்வெளி பற்றிய என்சைக்ளோபீடியா புத்தகங்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!