நான்கு வருடங்களுக்கு முன்பு திவாலாகித் திருவோடு ஏந்தியதோடு மட்டுமல்லாமல் அதிபரையும் துரத்தி அடித்த இலங்கையின் நிலைமை இன்று வேறு. இலங்கை ‘உயர் மத்தியத்தர வருமான நாடாக’ (Upper Middle Economic State) முன்னேறி இருப்பதாக உலக வங்கி தன் புதிய தரவரிசையில் சான்றளித்து இருக்கிறது.
உலக நாடுகளைக் குறைந்த ஆதாயம் பெறும் நாடுகள், குறைந்த மத்தியத்தர வருமானமுடைய நாடுகள், உயர் மத்தியத்தர வருமானமுடைய நாடுகள், உயர் வருமானமுடைய நாடுகள் என்று நான்கு தூண்களில் நிறுத்துவார்கள். இலங்கை ஐம்பத்தொன்பது உலக நாடுகளுடன் இரண்டாம் கட்டத்தில் நிற்கிறது.
இத்தோடு, 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை மற்றொரு மைல்கல்லையும் எட்டி இருக்கிறது. துண்டு விழும் தொகை எல்லாம் காணாமல் போய்விட்டன. இம்முறை செலவை விட வருமானம் அதிகம், அதாவது Economic Surplus. சுற்றுலா, அந்நிய முதலீடுகள், ஏற்றுமதி எல்லாம் எகிறி இருக்கின்றன. முன்னெப்போதும் இல்லாதளவில் அரச கஜானா நிரம்பி வழிகிறது.
















Add Comment