நாம் சிந்தனையைக் கடன் வாங்குகிறோமா? ஆம் என்று MIT போன்ற உலகின் முன்னணிப் பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகின் முக்கியப் பத்திரிகைகள் இதைச் சுட்டிக்காட்டிப் பேச ஆரம்பித்திருக்கின்றன. முதலில் இணையம் வந்தபோதும் இந்தக் குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. அதன் பின்னர் கூகுள் போன்ற தேடுபொறிகள் தோன்றின. இப்போது செயற்கை நுண்ணறிவும், chatGPT, Gemini நுண்ணறிவுச் செயலிகளும் எல்லோர் கையிலும் வந்ததும் இந்தப் பேச்சுகள் அதிகமாகியுள்ளன.
இந்த ஆய்வின் சாரத்தை இப்படிச் சுருக்கிச் சொல்லலாம். இன்று கூகுள் இல்லாத உலகத்தை யோசிப்பதே கடினமாக உள்ளது. இரண்டு இலக்கப் பெருக்கலோ, ஒரு வார்த்தையின் அர்த்தமோ தெரியவில்லை என்றால் கூகுளின் நினைவுதான் தலைக்குள் முதலில் வருகிறது. இன்று கூகுளைத் தாண்டி செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் வந்த பிறகு, சிந்திப்பது இன்னும் குறைந்துவிட்டது. இதுவே பழக்கம் என்றாகும்போது இந்தச் செயலிகள் இல்லாமல் வேலை செய்ய இயலாமல் போகிறது.
மேலும், இச்செயலிகள் எப்படி ஒரு முடிவுக்கு வருகின்றன என்று நம்மிடம் வெளிப்படையாகத் தெரிவிப்பதில்லை. உதாரணமாக, காணொளியோ நிழற்படமோ பொய் என்று அது கண்டுபிடித்தாலும், எப்படி என்று சொல்வதில்லை. நாமும் அதைக் கண்டுகொள்வதில்லை. இதனால் கற்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறது.
















Add Comment