7. பிரெஞ்சு ஆதிக்கத்தின் பிடியில்
1920ஆம் ஆண்டு சிரியா மற்றும் லெபனானில் தனது ஆட்சியைத் தொடங்கியது ஃபிரான்ஸ். ஆனாலும் அவர்களுக்கொரு அச்சம் இருந்தது. சிரிய தேசியவாதத்தின் கீழ் மக்கள் ஒன்றுபட்டு அவர்களை எதிர்க்கலாம். எனவே சிரியாவை மத, இன ரீதியான மாகாணங்களாகப் பிரிக்க முடிவெடுத்தது ஃபிரான்ஸ்.
ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனிப்பட்ட ராணுவம், வரிவசூல் முறை, ஆட்சியாளர்கள் எனக் கட்டமைத்தனர். இதன்மூலம் சிரியர்கள் என்ற தேசிய உணர்வு மக்களுக்கு ஏற்படுவதைத் தவிர்க்கலாம் எனத் திட்டமிட்டனர்.
அதன்படி டமாஸ்கஸ் (சுன்னி இஸ்லாமியர்கள்), அலெப்போ (சுன்னி இஸ்லாமியர்கள்), அலவைட் (அலவைட் இஸ்லாமியர்கள்), ஜபல் த்ரூஸ் (த்ரூஸ் இன மக்கள்), லெபனான் (மரோனைட் கிறிஸ்தவர்கள்) போன்ற மாகாணங்களாக சிரியா பிரிக்கப்பட்டது.











Add Comment