9. சுதந்திர சிரியாவின் முதல் சவால்
நினைத்தபடியே பரிபூரண சுதந்தரம் என்ற இலக்கை அடைந்திருந்தது சிரியா. அதுவரை ஜனநாயகம் என்ற ஒன்றை அவ்வப்போது பார்த்திருந்தாலும், இப்போது கிடைத்த அளவுக்கு இருக்கவில்லை. ஓட்டோமான் பேரரசின் கீழ், பிரிட்டனுக்குக் கீழ், ஃபிரான்ஸுக்குக் கீழ், விச்சி ஃபிரான்ஸுக்குக் கீழ் என்ற மாய ஜனநாயகமே அவர்களுக்குக் கிடைத்திருந்தது.
எனவே இப்புதிய சுதந்தரத்தை சிரிய மக்கள் கொண்டாடித் தீர்த்தனர். முந்தைய தேர்தல் முடிவுகளின்படி அமைந்த நேஷனல் பிளாக் ஆட்சி அமைத்தது. ஷுக்ரி அல்-குவாத்லி சிரியாவின் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். டமாஸ்கஸைச் சேர்ந்த ஷுக்ரி, வளமான செல்வந்தப் பின்னணி கொண்டவர். ஓட்டோமான் கல்வி நிலையங்களில் உயர்கல்வி கற்று, உயர்குடி ஆட்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவர்.











Add Comment