41. மறைவற்றது
அன்றைக்கு நீங்கள் என்னைக் கண்டீர்களா என்று பாரதாய தத்தன் மீண்டும் மீண்டும் சார்வாகனிடம் கேட்டுக்கொண்டே இருந்தான். சலிப்புறாமல் அவனும் ஒவ்வொரு முறையும் இல்லை என்றும், நான் காணவில்லை; கண்டவர்கள் சொன்னதுதான் என்றும் சொல்லிக்கொண்டே இருந்தான்.
பார்த்தீர்களா? இதுதான் இறை சித்தம் என்பது. ஈசன் அங்கே வந்திருக்கிறான். என் வடிவில் காட்சியளித்திருக்கிறான். உங்களுக்காக வந்தவன், உங்களைக் காப்பாற்ற வந்தவன் உங்கள் கண்ணுக்குத் தென்படவில்லை என்றால் என்ன பொருள்?
என்ன பொருள்?









Add Comment