23. புதின் எனும் நண்பர்
ரஷ்யா, சீனா, இரான் போன்ற நாடுகள் அசாத்துக்கு ஆதரவாக நின்றன. அவர் ஆட்சியில் நீடிப்பது அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான பலனை அளித்தது. அசாத் இல்லையெனில் அவை பலவீனங்களாக மாறலாம்.
உச்சகட்டமாக, சிரியாவுக்காக ஐநா சபையில் வீட்டோ செய்யும் அளவுக்குச் சென்றன ரஷ்யாவும் சீனாவும். சிரியா மீது அவர்களுக்கு அப்படி என்ன பாசம்?
சோவியத் உடைந்து சிதறிய பிறகு, சிரியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவென்பது கிட்டத்தட்ட இல்லை. ஆனால் புதினின் வருகைக்குப் பின் நிலைமை மாறியது.
மத்தியத் தரைக்கடலின் மீதான ஆதிக்கத்தை சிரியாவின் மூலமாகவே கொண்டிருந்தது ரஷ்யா. சிரியாவின் டார்டஸ் கடற்பகுதியில்தான் தன் கப்பல்படையை ரஷ்யா நிலைநிறுத்தியிருந்தது. மத்தியத் தரைக் கடலில் அவர்களுடைய செயல்பாடுகளுக்கு டார்டஸ் மிக முக்கியம். கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்ப, பொருட்களை ஏற்றிச் செல்ல எனப் பல செயல்பாடுகளுக்கு அப்பகுதி அத்தியாவசியமானதாக இருந்தது.









Add Comment