Home » உரி – 55
உரி நாள்தோறும்

உரி – 55

55. வேறொருவன்

ஓர் இற்புலியினைப் போல அவன் உறங்கிக்கொண்டிருந்தான். அதை உறக்கமென்று எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. எக்கணமும் விழித்து எழுவதற்கு ஆயத்தமாக உறங்க முடியுமா? உறங்காமல் உறங்கும் கலையென ஒன்றனை அவன் கற்றவனாக எனக்குத் தென்படவில்லை. ஓர் அபாயத்தை எதிர்நோக்கி இருப்பவனைப் போலவோ, அடுத்த கருமம் தட்டிச் சென்றுவிடாதிருக்கக் கவலை கொண்டவனாகவோ அவன் இல்லை. உண்மையில் பதற்றம் அல்லது அவசரத்தின் சுவடுகூட அவன் சிந்தையில் இல்லை. மிகவும் நிதானத்தில் இருந்தான். வெளி நிறைத்த வளியினை நிகர்த்த அமைதி அவன் சிந்தையில் இருந்தது. அது அவனது அனைத்து நாடிகளின் இயக்கத்திலும் வெளிப்பட்டது. குருதியோட்டம் சீராக இருந்தது. சுவாசத்தில் சந்திர-சூரிய நாடிகள் சரியாக இயங்கின.

ஒன்றைக் கவனித்தேன். சற்று நேரத்துக்கு முன்பு வரை அவன் ஆவேசமாக வாதம் புரிந்துகொண்டிருந்தான். கருவூர்ச் சித்தரும் உதுமானி நாயனாரும் மோசடிக்காரர்கள் என்று அவன் திடமாக நம்பியதை நான் கண்டுகொண்டேன். அதை அவன் துணிந்து வெளிப்படுத்தவும் செய்தான். அச்சத்தின் சுவடற்ற அவனது சொற்கள் அவற்றின் கூர்மைக்குக் கேடெழாத அளவில் உற்பத்தியானதைக் கண்டேன். அவன் நிறுத்தி, சிந்தித்துப் பேசுவதில்லை. தோன்றுவதை அப்படியேதான் வெளிப்படுத்துகிறான். ஆயினும் தோன்றலுக்கும் வெளிப்பாட்டுக்கும் இடையே கணக்கிடவியலாத நுண்நொடிப் பொழுதில் ஒவ்வொரு சொல்லையும் அவன் பரிசீலித்து அனுப்புவதை ரசித்தேன். நீண்ட, மிக நீண்ட வாத விவாதங்களுக்குப் பிறகு உறங்க நினைத்த ஒருவனது சிந்தையில் நொடிப் பொழுதும் முன்னர் நிகழ்ந்த வாதங்களைப் பற்றிய நினைப்பில்லை என்பது விசித்திரம்தான். ஆனால் அவன் அப்படித்தான் இருந்தான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!