Home » போதைப் பொருள் கடத்திய அதிபர்!
உலகம்

போதைப் பொருள் கடத்திய அதிபர்!

அதிபர் ஹுவான் ஒர்லாண்டோ ஹெர்னாண்டெஸ்

ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹுவான் ஒர்லாண்டோ ஹெர்னாண்டெஸ். போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக இவருக்கு அமெரிக்க அரசாங்கத்தால் நாற்பத்தைந்து வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இது நடந்து ஒரு வருடம் ஆன நிலையில் சென்ற வாரம் பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் இவருக்குத் தனி வெளிச்சம் தரப்பட்டது. காரணம், இவருக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்துள்ளார் அமெரிக்காவின் அரசியல் கதாநாயகனான டொனால்ட் டிரம்ப்.

ஒரு நாட்டின் அதிபரே போதைப்பொருள் கடத்துபவர் என்றால் அந்நாட்டின் நிலை என்னவாக இருக்கும் என்பதற்குச் சோகமான உதாரணம் ஹோண்டுராஸ்.

கரீபியன் கடலை ஒட்டி உள்ள நாடுகளுக்குத் தனித்துவமான அம்சங்கள் உள்ளன. கடலோரக் காற்று, வெள்ளை மணல், வெப்பமண்டலப் பகுதி என்பதால் தென்னை மரங்களும், செடிகளும் கடலோரப் பகுதிகளை மேலும் அழகூட்டும். நியாயமாகப் பார்த்தால், உலகையே வசீகரிக்கும் சுற்றுலாத் தலமாக இருந்திருக்க வேண்டும் ஹோண்டுராஸ். ஆனால், உலகத்தின் மிகவும் பயங்கரமான நாடுகளில் ஒன்றாக உள்ளது. இங்கே அறுபத்து மூன்று சதவீத மக்கள் வறுமையிலும் பட்டினியிலும் இருக்கிறார்கள். இதற்கும் இதன் புவியியல் அமைப்பே காரணமாகிவிட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!