Home » சொர்க்கம் பாதி, நரகம் மீதி
சுற்றுலா

சொர்க்கம் பாதி, நரகம் மீதி

வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் நடுவில் நீண்ட கழுத்துபோல் காட்சியளிக்கும் நிலப்பரப்புக்கு இஸ்துமஸ் என்று பெயர்  சூட்டியிருக்கிறார்கள். இப்பகுதியில் ஏழு நாடுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கின்றன. இந்நாடுகளை ஒன்றாக ‘மத்திய அமெரிக்க நாடுகள்’ என்று அழைக்கிறார்கள். இந்தக் கழுத்தில் தொண்டைக் குழி போல நடுவில் உள்ள நாடு ஹோண்டூரஸ். ஒருபக்கம் கரீபியன் கடலும், மறுபக்கம் நிகரகுவா, எல் சால்வடோர் நாடுகளும் சூழ அமைந்திருக்கும் அழகிய தேசம்.

மத்திய அமெரிக்க நாடுகள் அனைத்துமே இயற்கை வளங்கள் நிறைந்தவைதான். ஒருபக்கம் மலை, கருநீலக் கடற்கரை, கரீபிய மணல் என்று ஹோண்டூரஸ் சொர்க்கத்தீவு போன்ற உணர்வை அளிக்கும். அதேசமயம் மாயன் கலாசாரத்தையும், அந்நாகரிகத்தின் புராதனக் கட்டடங்களையும் கொண்டிருக்கும். ஸ்பானிய பாணி வண்ணம் தீட்டிய சாலைகள், வீடுகள், தேவாலயங்கள் என்று இயற்கை, பழமை, புதுமையின் கலவையாக உள்ள நாடு இது.

இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மூன்று வெவ்வேறு நாடுகளுக்குச் சென்ற அனுபவம் கிடைக்கும். அவர்கள் பவளப் பாறைகள் நிறைந்த கடலில் ஸ்கூபா டைவிங் செய்வதிலும், மலைகளில் ட்ரெக்கிங் செல்வதிலும் பொழுதை இனிமையாகச் செலவிடலாம். பசுமைக் காடுகள், அதன் நடுவில் அருவிகள், பலவகையான பறவைகள் என இயற்கையை ரசிப்பவர்களுக்கு ஹோண்டூரஸ் குறையாமல் அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!