‘வீட்டில் உட்கார்ந்தபடி சம்பாதிக்கலாம். உங்களிடம் அடிப்படை ஆங்கில அறிவும் ஒரு திறன்பேசியும் இருந்தால் போதும். எந்த முதலீடும் தேவையில்லை. வயதோ, கல்வித் தகுதியோ, இனமோ, இடமோ எதுவுமே தடை இல்லை. தினமும் சிலமணி நேரங்களை மட்டும் செலவிட்டு ரூபாய் ஆயிரம் முதல் ஐயாயிரம் வரை இலகுவாகப் பணம் ஈட்டலாம்.’
சில வருடங்களாக இதுபோன்ற விளம்பரங்கள் அதிகம் வருகின்றன. தங்களுக்கென்று தனிப்பட்ட வருமானம் எதுவும் இல்லாத சமூகத்தினர்தான் இதுபோன்ற விளம்பரங்களின் பிரதான இலக்கு. ஆகவே, தினமும் வீட்டில் உழைத்துச் சோர்ந்த இல்லத்தரசிகளையும், உழைத்து ஓய்ந்து, அந்த ஓய்வும் சலித்துப் போன முதியவர்களையும் இவை சட்டென்று கவர்ந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் கிடைத்த வேலையைப் பிடித்துக் கொண்டு, பகுதிநேர வேலை தேடிக் கொண்டிருந்தவர்கள் என சமூகத்தின் இதர பலருக்கும் இது பயனுள்ள ஒன்றாகவே தோற்றமளிக்கின்றது.
வரி மாறாமல் எனக்கு ஏற்பட்ட நிகழ்வு. இப்போது காவல் துறையின் நடவடிக்கையை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். பேராசை பெரு நஷ்டம் என்பது பெரியோர்களின் அனுபவம் வாய்ந்த பொன்மொழி. நண்பர்கள் எச்சரிக்கையாக இருக்கவும். காவல் துறையிலும் கட்டுரையில் குறிப்பிட்டபடி நிறைய புகார்கள் வருவதாகக் கூறினார்கள்.