மொபைலில் எதையோ நோண்டிக் கொண்டிருந்த இகவின் அருகில் வந்தாள் மனைவி. “என்னங்க… என்ன பண்ணிட்ருக்கீங்க..?”
அவள் குரலில் அக்கறையும் கனிவும் தொனித்தாலே அதன் பின்னால் ஏதோ அவனுக்கு ஆபத்தான ஒன்று இருக்கும் என்பதை அனுபவம் உணர்த்தியதால் சற்றே கலவரத்துடன் ஏறிட்டான். “ஒண்ணுமில்ல. சும்மா யூட்யூப்ல மேஞ்சுட்ருக்கேன். என்ன சொல்லு..”
“அதுவந்து… ஒண்ணுமில்ல… நாம சேந்து ஒண்ணா ஷாப்பிங் போய் நாளாச்சு. இப்ப வெட்டியாத்தானே இருக்கீங்க. போய்ட்டு வரலாமா..?”
Add Comment