Home » நீளும் ஆயுள்
இன்குபேட்டர்

நீளும் ஆயுள்

மனித குலத்தின் சராசரி ஆயுள் காலம் அதிகரித்துக் கொண்டே போகிறது. முக்கியமான காரணம் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள அறிவியல் முன்னேற்றங்கள். உயிரை எடுக்கக் கூடிய பல நோய்கள், அறிவியல் வளர்ச்சியினால் குணமாக்கக் கூடியதாக மாறி இருக்கின்றன. இது சராசரி ஆயுட்காலத்தைக் கணிசமாக அதிகரித்துள்ளது. 2017 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 2050 ஆம் ஆண்டளவில் அறுபது வயதுக்கு மேலுள்ளவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகவும், 2100 ஆம் ஆண்டளவில் மூன்று மடங்காகவும் இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை கணிப்பிடுகிறது. இதே போல் எண்பது வயதுக்கு மேலுள்ளவர்களின் எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டளவில் மூன்று மடங்காகவும், 2100 ஆம் ஆண்டளவில் ஏழு மடங்காகவும் அதிகரிக்கலாம் என்றும் அதே கணிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயுள்காலம் அதிகரிப்பது வேறு ஒரு சிக்கலை உருவாக்குகிறது. வயதான மூத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அவர்களைப் பராமரிப்பதற்கான செலவுகளும் அதிகரிக்கும் அல்லவா.

இந்தச் சவாலைச் சமாளிக்க வேண்டுமாயின் ஆயுள்காலம் அதிகரித்தால் மட்டும் போதாது, முதியவர்கள் ஆரோக்கியமாக வாழ்பவர்களாகவும் இருக்க வேண்டும். அதனால் மருத்துவ அறிவியல் துறையின் ஆய்வுகள் நோய்களைக் குணமாக்கும் வழி முறைகளையும் மருந்துகளையும் கண்டு பிடிப்பதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்வதற்கான வழி முறைகளை ஆராய்ச்சி செய்யும் பக்கமாகவும் விரிவடைந்துள்ளது. எமக்கு வயதாகும் போது மரபணுக்கள் எப்படிச் செயற்படுகின்றன? எதனால் எமக்கு முதிர்ச்சி ஏற்படுகின்றது? போன்ற ஆய்வுகள் பல வருடங்களாகவே நடைபெற்று வருகின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!