இவ்வுலகில் வாழும் உயிரினங்களுக்கு மட்டுமே வேறுபட்ட தரத்தில் அறிவும் திறனும் உள்ளது என்பது அண்மைக்காலம் வரையில் இருந்த நிலவரம். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் ஜடப் பொருட்களுக்கும் திறனும் செயற்கை நுண்ணறிவும் வந்து சேரத் தொடங்கியுள்ளன. அவ்வகையில் நாம் இக்கட்டுரையில் பார்க்கப் போவது பல வகையான திறன்களைக் கொண்ட ஸ்மார்ட் பாண்டேஜ்கள்.
தற்போதுள்ள பாண்டேஜ்கள் காயத்தையும் அதற்குப் பொதுவாகப் போடப்படும் மருந்தையும் மூடிப் பாதுகாக்க மட்டுமே பயன்படுகின்றன. ஒவ்வொரு முறையும் பாண்டேஜைக் கழற்றும் போதே காயம் எப்படி இருக்கிறது என்பதை மருத்துவர்களால் பார்க்க முடிகிறது.
காயத்தினைத் தொடர்ந்து மானிட்டர் பண்ணுவது, பாக்டீரியாக்கள் வளர விடாமல் பாதுகாப்பது, மருந்துகளைத் தேவையான அளவில் சேர்ப்பது போன்றவற்றைத் தொடர்ந்து செய்யக் கூடியவையே ஸ்மார்ட் பாண்டேஜ்கள். பாண்டேஜ் கழற்றும் வரை நேரத்தை வீணாக்காது தேவைப்படும் போதே உடனடியாகச் செயல்படுதல் காயம் ஆறும் வேகத்தை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பலர் இத்துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது ஆய்வுகள் நம்பிக்கையூட்டும் ஆரம்ப நிலை முடிவுகளைக் கொண்டு வந்துள்ளன.
Add Comment