Home » செயற்கை இறைச்சி சாகசங்கள்
இன்குபேட்டர்

செயற்கை இறைச்சி சாகசங்கள்

அசைவ உணவுப் பிரியர்களுக்காக ஆடு, மாடு, பன்றி போன்ற மிருகங்கள்,  கோழி போன்ற பறவைகள் வளர்க்கப்படும் பண்ணைகள் எல்லா நாடுகளிலும் உண்டு. இப்பண்ணைகளின் முக்கிய நோக்கம் அவர்கள் வளர்க்கும் மிருகங்களையும் பறவைகளையும் இறைச்சிக்காக விற்பனை செய்வதே. அண்மைக் காலங்களில் மிருகங்களை உணவுக்காக வளர்த்தாலும் அவற்றை மனிதாபிமான முறைகளோடு வளர்க்க வேண்டும். அவை நடந்து திரிவதற்குப் போதுமானளவு இடம் ஒதுக்க வேண்டும் போன்ற மிருகநலச் சட்டங்களும் பல நாடுகளில் உண்டு. அது மட்டுமல்லாமல் உணவுக்காக மிருகங்களைக் கொலை செய்யும் போது இப்படித்தான் செய்ய வேண்டும் எனும் கோஷர், ஹலால் எனும் மதரீதியான விதி முறைகளும் உள்ளன. இம்மதங்களைப் பின்பற்றுவோர் கடையில் இறைச்சி வாங்கும் போது அவை சரியான முறையினைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட இறைச்சிகளா என்று உறுதி செய்த பின்னரே வாங்குவார்கள்.

தற்போது உலகளவில் வீகனிசம் எனப்படும் மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகள் கொண்ட சைவ உணவுப் பழக்கமும் மக்களிடையே பரவிக் கொண்டு வருகிறது. இவர்களது முறையில் எந்த விதமான விலங்கிலிருந்து உருவாக்கப்பட்ட உணவுப் பொருளும் இருக்காது. அதாவது பால் மற்றும் பாலிலிருந்து உருவாக்கப்படும் உணவுகளும் இருக்காது. இவர்கள் சுத்தமான தாவர பட்சணிகள் என்று சொல்லலாம்.

அசைவ உணவைச் சிறு வயதில் உண்ட போதும் பின்னர் அசைவத்தைக் கை விட்டவர்களும் உண்டு. இவர்களில் பெரும்பாலானோர் அசைவத்தை ஒதுக்கியதற்கான காரணம் விலங்குகள் மேலுள்ள ஜீவகாருண்யமே. நமது உணவுக்காக இன்னுமொரு உயிரை வதைக்கக் கூடாது எனும் கொள்கை காரணமாகத் தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றியவர்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!