இந்தியாவின் பால் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக லாக்டோஸ் இல்லாத பால் பொருள்களின் உற்பத்தியும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இவ்வகை பால்பொருள்களின் நுகர்வு கணிசமாக உயர்ந்துள்ளது என்கின்றன சந்தை நிலவரங்கள். உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் என்கிறார்கள்.
பன்னெடுங்காலமாக, பாலும் பால் பொருள்களும் இந்தியர்களுடைய முக்கியமான உணவுப்பொருள்களாக இருந்துவருகின்றன. மழலைக்குப் பாலூட்டியும் மரணத் தருவாயில் பாலூற்றியும் பழகியவர்கள் நாம். பாலைப் பல செய்யுள்களில் பாடிச் சிறப்பித்து மகிழ்ந்திருக்கிறோம். ‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்’ என்ற வரிசையில்கூடப் பாலைத்தான் முதலில் வைத்தார் ஔவை.
பாலைத் தரும் கால்நடைகளைச் செல்வம் என்றனர் முன்னோர். நிரை கவர்தலும் நிரை மீட்டலும் வீரமாகக் கருதப்பட்டன. பசுக்களைக் கோமாதா என இன்றும் போற்றிவருகிறார்கள் பலர். அது மட்டுமா? பசு அரசியல் என்றோர் அரசியல் சித்தாந்தத்தையே உருவாக்கியோர் இந்நாட்டில் இருக்கிறார்கள்.














Add Comment