பல மாதங்களாகப் பரப்புரைகள், விவாதங்கள், நகரசபைக் கூட்டங்கள், நிதி திரட்டுதல் ஆகியவற்றுக்குப் பிறகு, குடியரசுக் கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் ஜனவரி 17அன்று தங்கள் முதல் தேர்தல் களத்தை அயோவாவில் எதிர்கொண்டனர்.
இவாஞ்சலிக்கள்(evangelics), தீவிர வெள்ளை நிற இனப்பற்றாளர்கள் ஆதரவுடன், ‘எலும்பை உருக்கும் பனியில் இறந்தாலும் எனக்கான ஆதரவைத் தந்துவிட்டு இறந்து போவதே உங்கள் கடமை’ எனக் கூக்குரலிட்ட முன்னாள் அதிபர் டிரம்ப் பெரு வெற்றி அடைந்தார்!!!
41 பிரதிநிதிகள் (delegate) தர வரிசையில் 20 பிரதிநிதிகளுடன் முன்னிலையில் அவரே, ரானுக்கு 9 பிரதிநிதிகளும் நிக்கி ஹேலிக்கு 8 பிரதிநிதிகளும் பிரித்துக் கொடுத்தனர் அயோவா குடியரசுக் கட்சி உறுப்பினர்கள். 3 பிரதிநிதிகளைப் பெற்று நான்காவது இடத்திற்கு வந்த, விவேக் களத்தில் இருந்து விலகி டிரம்ப்பிற்குத் தன் ஆதரவைத் தந்துவிட்டார்.
Add Comment