Home » ஜெஃப் பெஸோஸ்: இரு வழிக் கதவு
ஆளுமை

ஜெஃப் பெஸோஸ்: இரு வழிக் கதவு

சின்னப் பையன்தான். அப்போது அவனுக்குப் பதினெட்டு வயது. வருடம், 1982.  விண்வெளியில் ஹோட்டல் மற்றும் பார்க் உருவாக்கி மக்களைக் குடியேற்ற வேண்டும் என்று கனவு கண்டான். அன்று உள்ளூர்ப் பத்திரிகைகளுக்குத் தீனியாக விளங்கியது இந்தச் செய்தி. நாளடைவில் சரித்திரத்தில் பெயர் பெறும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

பிற்காலத்தில் அமேசான் என்ற சாம்ராஜ்யத்தையம், ப்ளூ ஒரிஜின் எனும் விண்வெளி விமான நிறுவனத்தையும் தொடங்கி, இன்று உலகத்தின் இரண்டாவது பெரும் பணக்காரராக உள்ளார். மனைவியைக் கொஞ்சம் சகித்துக் கொண்டிருந்தால், முதல் இடத்திலேயே இருந்திருப்பார்.  டிவோர்ஸ் செய்த மனைவிக்கு $38 பில்லியன் கொடுக்க நேரிட்டதால் இரண்டாம் இடம்.

தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில் நம்மை நூறு சதவீதம் சோம்பேறியாக்கி, வீட்டிலிருந்தே கறிவேப்பிலை முதல், டிவி பிரிட்ஜ் வரை வாங்கவும், நம் வீட்டில் உள்ள விளக்கை அணைக்கக்கூட எழுந்திருக்காமல் அலெக்சா உதவியை நாடுவது வரை உள்ள ‘திங்க் பிக்’ ஐடியாவின் முன்னோடி, ஜெப் பெசோஸ். இந்த மாபெரும் மூளைக்காரர் எப்படிப் பணியாற்றுகிறார்?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்