Home » மீள்வாரா ஜெகன்மோகன் ரெட்டி?
இந்தியா

மீள்வாரா ஜெகன்மோகன் ரெட்டி?

தனது கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரசோடு இணையப் போகிறார் ஜெகன்மோகன் ரெட்டி எனவும் அதற்காகக் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டி.கே.சிவக்குமாரை ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாயின. 2019-ஆம் ஆண்டு தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்திருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த முடிவு உண்மையானால் ஆந்திர அரசியலில் இது மிக முக்கியமான சம்பவமாக இருக்கும். ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த அரசியல் உச்சம் அரசியல் வாரிசு என்பதால் மட்டும் வந்ததல்ல.

2009-ஆம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் தேதி சித்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு ஹெலிகாப்டர் திடீரெனக் காணாமல் போனது. அந்த ஹெலிகாப்டரில்தான் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பயணம் செய்து கொண்டிருந்தார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் நடந்து முடிந்து 24 மணி நேரத்துக்குப் பிறகு நல்லமலா என்னும் வனப்பகுதியில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிக் கிடந்ததைக் கண்டுபிடித்தனர். அதில் பயணம் செய்த ஒய்.எஸ்.ஆர் உள்ளிட்ட ஐந்து பேரும் உயிரிழந்திருந்தனர். ஒய்.எஸ்.ஆர் இறப்பைக் கேள்விப்பட்ட 402 பேர் அதிர்ச்சியில் இறந்ததாகவும் 60 பேர் தற்கொலை செய்துகொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.

1982-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தெலுங்கு தேசம் அடுத்த ஆண்டிலேயே ஆட்சியைப் பிடித்திருந்தது. காங்கிரசின் இடம் கிட்டத்தட்ட இல்லாமல் போனது. காங்கிரசை வலுப்படுத்த வலிமையான தலைமை காலத்தின் தேவையாக இருந்தது. மருத்துவம் படித்திருந்த ஒஸ்.எஸ்.ஆரை இந்திராகாந்திக்குப் பரிந்துரை செய்தார் ராஜீவ்காந்தி. 1989-ஆம் ஆண்டு ஆந்திராவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்க ராஜசேகர ரெட்டியின் களப்பணி ஒன்றே காரணமாக இருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!