‘எனக்குப் பேய்ப் படங்கள் பிடிக்காது, காதல்-காமெடி படங்கள்தான் பிடிக்கும். எனது இந்த விருப்பத்தைத் தெரிந்து கொள்ளாமல் சினிமா நிறுவனங்கள் நான் சென்ற இணையத்தளங்களில் எனக்குப் பேய்ப் பட முன்னோட்டங்களையே காண்பித்தார்கள். இதனால் பல நல்ல காதல் படங்களைத் தவறவிட்டேன். இதைச் சரிசெய்யும் நோக்கத்திற்காகவே இந்தச் செயலி உருவாக்கப்பட்டது.’
இப்படிச் சொன்னவர் ஜஸ்ட்வாட்ச் (JustWatch) செயலியின் நிறுவனர் டேவிட் க்ரொயே (David Croyé).
வீட்டில் இருந்தே திரைப்படங்களைப் பார்க்க இன்று நம்மில் பலரும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீயோ ஹாட்ஸ்டார், சோனி, சன் நெக்ஸ்ட் எனப் பல சந்தாக்களை வைத்திருப்போம். ஒரு குறிப்பிட்ட படத்தைப் பார்க்க விரும்பினால், அது எந்தத் தளத்தில் கிடைக்கிறது எனக் கண்டுபிடிக்கவே பல நிமிடங்கள் ஆகும். ஆனால் ஜஸ்ட்வாட்ச் செயலியில் நாம் பார்க்க விரும்பும் படம் அல்லது தொடரின் பெயரையோ, நடிகர்களின் பெயர்களையோ உள்ளிட்டால் அது எங்கே பார்க்கக் கிடைக்கும் என உடனே சொல்லிவிடும்.















Add Comment