மத்தியக் கிழக்கு நாடுகளில் கச்சா எண்ணெய் வணிகத்தின் தலைமை நாடு சவுதி அரேபியா. 1932ஆம் ஆண்டு தனி நாடாக உருவெடுத்த சவுதி அரேபியாவின் மக்கள் தொகை சுமார் 37 மில்லியன். அதில் சுமார் 13 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வெளிநாட்டுத் தொழிலாளர்கள். புலம்பெயர்த் தொழிலாளர்களின் வாழ்க்கையை அடிமைத்தனத்துக்கு இணையாக வைத்திருந்த கஃபாலா முறையை இப்போது சவுதி அரசு ரத்து செய்துள்ளது. அதற்கு மாற்றாக, ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த கஃபாலா முறை நீக்கத்தினால் சுமார் 13 மில்லியன் புலம்பெயர்த் தொழிலாளர்கள் பயனடைவார்கள் .அதில் 2.6 மில்லியன் பேர் இந்தியர்கள் ஆவர்.
கஃபாலா முறை என்பது சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளில் நடைமுறையில் இருந்த பழமையான தொழிலாளர் கட்டுப்பாட்டு முறை. எண்ணெய் வணிகத்தின் உச்சம், சவுதி அரேபியாவின் அதிவேகப் பொருளாதார வளர்ச்சிக்கு அடிகோலியது.















Add Comment