Home » சுவரின் மறுபக்கம்: ஒரு நாவல், ஒரு பரிசு, ஒரு சரித்திரம்
உலகம்

சுவரின் மறுபக்கம்: ஒரு நாவல், ஒரு பரிசு, ஒரு சரித்திரம்

ஜென்னி எர்பன்பெக்- மைக்கல் ஹாப்மன்

ஜென்னி எர்பன்பெக் ஜெர்மன் மொழியில் எழுதி, மைக்கல் ஹாப்மன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள ‘கைரோஸ்’ நாவல் புக்கர் பரிசினை வென்றுள்ளது. 53 வயது நாயகன். 19 வயது நாயகி. காப்பி குடிக்கப் போய் காவியக் காதலில் விழுகிறார்கள். பின் தெளிகிறார்கள். இன்னுமொரு முறையற்ற காதல் கதையாக இல்லை இந்நாவல். விருதுக் குழுவினர் குறிப்பிட்டுப் பாராட்டியிருப்பது கதையின் பின்னணியை.

கதையின் களம் கிழக்கு ஜெர்மனி. பெர்லின் சுவரின் வரலாறும் நூலில் பதிவாகியுள்ளது. அதைவிட முக்கியமாக, அதிகம் அறிந்திராத சோஷலிச கிழக்கு ஜெர்மனியர்களின் வாழ்வைப் பேசுகிறது இந்நாவல். புனைவின் பின்னால் இருக்கும் புனைவற்ற வரலாற்றை உத்தேசித்து வழங்கப்பட்டுள்ள பரிசு இது. சமீப ஆண்டுகளில் கிழக்கு ஜெர்மன் வரலாற்றின் மீது மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். பெர்லின் சுவருக்குப் பின்னால் வாழ்ந்த மக்களின் வரலாற்றின் மீது புது வெளிச்சம் பாய்ந்துள்ளது.

நவீன வரலாறில் பெர்லின் சுவருக்கு முக்கியமான இடம் உள்ளது. நம்மில் பலரும் இதைப் பற்றி அறிந்திருப்போம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வெற்றி பெற்ற ஜெர்மனியை யு.கே., பிரான்சு, அமெரிக்கா, சோவியத் நாடுகள் கூறுபோட்டுப் பிரித்துக் கொண்டன. ஜெர்மனின் தலைநகர் பெர்லின் சோவியத் வசம் சென்றது. அதெல்லாம் பரவாயில்லை என்று பெர்லினையும் நான்கு துண்டுகளாக்கினர். நேச நாடுகள் என்று பெயர் வைத்தால் போதுமா? கம்யூனிசமும் முதலாளித்துவமும் மாறுபட்ட தத்துவங்கள் ஆயிற்றே…..

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!