Home » உரு கொடுக்கும் கருவூரார்
ஆன்மிகம்

உரு கொடுக்கும் கருவூரார்

கருவூர் சாமியார், கருவூர் தேவர், கருவூர் நாயனார் என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் கருவூரார். கொங்கு மண்டலத்தினைச் சேர்ந்த கருவூரில் பிறந்தவர் இவர். எனவே, பிறந்த ஊரின் பெயரோடு சேர்த்து கருவூரார் என அனைவராலும் குறிக்கப்படுகிறார். இவரின் இயற்பெயர் குறித்த வரலாறு தெரியவில்லை. ஆனால், இவர் வாழ்ந்த காலத்தில் இவரது யோக சக்தியின் மூலம் இவர் செய்த சித்துக்களின் வரலாறு மலைக்க வைக்கிறது.

இறைவனின் திருவுருவங்களைப் பஞ்சலோகங்களில் செய்வது, ஏற்கனவே இருக்கும் உலோக திருமேனிகளை செப்பமிடுவது ஆகிய பரம பவித்திரமான திருப்பணியைச் செய்த குடும்பத்தில் இவர் பிறந்திருக்கிறார். கருவூரார் சிறுவயதிலேயே வேதம், ஆகமம், சாஸ்திரம் ஆகியவற்றை முறைப்படி கற்றுத் தேர்ந்தார். இவரது குடும்பத்தொழிலான உலோகத் திருமேனிகள் செய்வதில் இவர் சிறந்து விளங்கினார். அதில் இவருக்கு இருந்த ஈடுபாடும், ஆர்வமும், தொழில் பக்தியும் சாதாரணமானது அல்ல. அது எந்தளவுக்கு உதவியாக இருந்தது என்றால், பின்னாளில் கருவூரார் நிகழ்த்திக்காட்டிய பல அற்புதங்கள் இறைவன் திருமேனி சம்பந்தமாகவே இருந்திருக்கின்றன.

இவர் அம்மன் வழிபாட்டினை மிகத் தீவிரமாகக் கடைப்பிடித்து வாழ்ந்துள்ளார். அதே சமயம் சித்தர் போகரை தன்னுடைய குருவாகக்கருதி அவரையும் வழிப்பட்டுள்ளார். ஒரு சமயம் குருநாதர் போகரை இவர் சந்தித்தபோது முறைப்படி அம்மன் வழிபாடு செய்வது எப்படி என்பதையும், அதற்குரிய மந்திரங்களையும் இவருக்கு உபதேசித்த குரு போகர், இவரைத் தொடர்ந்து அம்மன் வழிபாட்டிலேயே இருந்திருக்கச் சொல்லியிருக்கிறார். குரு உபதேசம் என்பது சாதாரணமானதா என்ன? குருவின் அறிவுரைப்படி தொடர்ந்து முறைப்படி அம்மன் வழிபாடு செய்ததினால் யோக சித்தி, சக்தி இரண்டும் கருவூராருக்கு கைவரப்பெற்றது. இவரது யோக சக்தியினால் வேண்டும்போதெல்லாம், இறைவன் சிவபெருமானை தரிசிக்கும் வரமும் இவருக்கு இருந்திருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!