லேடி பேர்ட் ஜான்சன்
தொழில் முனைவராக இருந்து அதிபரானவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், தொழில் முனைவராக இருந்து, தன் கணவரின் தேர்தலுக்குச் செலவு செய்த பெண்ணை பற்றி அறிவீர்களா? அப்படிப்பட்டவர்தான் லேடி பேர்ட் ஜான்சன்.
இருபதாம் நூற்றாண்டில் அதிகம் மதிப்பிடப்படாத, ஆனால் மிகவும் திறமையான முதல் பெண்மணிகளில் ஒருவர் கிளாடியா ஆல்ட்டா ‘லேடி பேர்ட்’ ஜான்சன். அமெரிக்க அதிபராக லிண்டன் பி. ஜான்சன் மாற்றங்கள் செய்தாரோ இல்லையோ, அவர் மனைவியாக லேடி பேர்ட், முதல் பெண்மணியின் பாத்திரத்தையே மறுவரையறை செய்தார்.
டிசம்பர் 22, 1912 அன்று டெக்சாஸின் கர்னாக் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார் கிளாடியா ஆல்ட்டா டெய்லர். அங்காடி நடத்திய தாமஸ் ஜெபர்சன் டெய்லருக்கும், மின்னி பாட்டிலோவுக்கும் மகளாகப் பிறந்தார். அவர் குழந்தையாக இருந்தபோது, அவரது செவிலி ஆலிஸ் டிட்டில், ‘இவள் ஒரு லேடி பேர்டைப் போல அழகாக இருக்கிறாள்’ என்று கூறினார். அந்த அழகிய பெயர் வாழ்நாள் முழுவதும் அவருடன் நீடித்தது.













Add Comment