Home » நிழலாக இருந்த நிஜம்
கிச்சன் கேபினட்

நிழலாக இருந்த நிஜம்

லூ ஹெர்பர்ட்

லூ ஹெர்பர்ட்

சிந்தனையாளர், அறிவியலாளர், மனிதநேயர், கொடை வள்ளல், பாலியல் சமன்பாடு பேணுபவர், இனவெறி இல்லாதவர் எனப் பல சிறப்புகள் கொண்ட அமைதியான முதல் பெண்மணிதான் லூ ஹெர்பர்ட்.

லூ ஹென்றி 1874இல் ஐயோவாவில் பிறந்தார். அவரது அம்மா ஒரு பள்ளி ஆசிரியை, அப்பா வங்கியில் பணியாற்றினார். பள்ளியில் படிக்கும்போதே குதிரையேற்றம், வில்வித்தை, கூடைப்பந்து விளையாட்டுகளில் தேர்ச்சியுற்றிருந்தார்.

வாழ்க்கைக்குத் தேவையான நிதி நிர்வாகம், கூடாரங்களில் தங்கி வாழ்க்கை நடத்துவது ஆகியவற்றிலும் இவரது பெற்றோர் இவருக்குப் பயிற்சி அளித்திருந்தனர். குடும்பம் கலிஃபோர்னியாவுக்குக் குடிபெயர்ந்ததால் அங்கே தனது படிப்பைத் தொடர்ந்தார். அப்போதே தாவரவியல் மற்றும் மிருகவியல் தொடர்பான பாடங்களில் மிகுந்த ஆர்வம் காட்டினார். பிறகு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் புவியியலில் பட்டம் பெற்றார்.

அமெரிக்க வரலாற்றில் புவியியலில் பட்டம் பெற்ற முதல் சில பெண்களில் இவரும் ஒருவர். பெரென்னர் என்ற பேராசிரியர் தலைமையில் ஆராய்ச்சி மாணவியாக இருக்கும்போது ஹெர்பர்ட் ஹூவரைச் சந்தித்தார். லூ ஹூவர் லத்தீன் மொழியில் மிகுந்த புலமை பெற்றவர். அகிரிப்பா எழுதிய ‘De Re Metallica’ என்ற 16-ஆம் நூற்றாண்டு சுரங்கத் தொழில் சார்ந்த லத்தீன் நூலைத் தனது கணவருடன் இணைந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!