ஃப்ளாரென்ஸ் வாரன் ஹார்டிங்
காதல், துரோகம், நட்பு என அனைத்தும் நிறைந்த ஆக்ஷன் திரில்லர் கதை இது. ஃப்ளாரென்ஸ் 1860இல் ஓஹையோவில் பிறந்தார். தந்தை அமோஸ் கிளிங், ஒரு ஜெர்மன் வம்சாவளியைச் சேர்ந்தவர். தாய் லுசியா, பூட்டான்-ஃபிரெஞ்சு வம்சாவளியில் வந்தவர். தந்தை வங்கி அதிகாரியாகப் பணியாற்றினார். மகள் சிறந்த நிர்வாகியாக வரவேண்டும் என விரும்பினார். வணிகம், நில நிர்வாகம் ஆகியவற்றை மகளுக்குக் கற்பித்தார்.
ஆனால் ஃப்ளாரென்ஸுக்கு பியானோ மீது அதிகப் பிரியம். இசைக்கல்லூரியில் பியானோ கற்கச் சென்றார். இதனால் கோபமடைந்த தந்தை மகளைச் சித்திரவதை செய்தார். அறைக்குள் பூட்டி வைத்தும் பெல்ட்டால் அடித்தார்.
தந்தையை எதிர்க்கப் பத்தொன்பது வயதில் வீட்டைவிட்டு வெளியேறினார் ஃப்ளாரென்ஸ். ஹென்றி டிவால்வ் என்பவரை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார். மரியோன் ஸ்டார் பத்திரிகையில் திருமணச் செய்தி வெளியானது. பத்திரிகை மூலமாக மகளின் திருமணம் பற்றிய செய்தியைப் பார்த்து அவர் தந்தை அதிர்ச்சியடைந்தார்.
அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. ஹென்றி ஒரு குடிகாரராக இருந்தார். அதைத் தடுக்க முயன்ற மனைவியையும் குழந்தையையும் விட்டு வெளியேறினார். அவர் ஒரு புகைவண்டியைக் கொள்ளையடிக்கத் துணிந்தார். இதனால் ஃப்ளாரென்ஸ் அவரை உடனடியாக விவாகரத்து செய்தார். குழந்தையுடன் வந்த மகளைத் தந்தை ஏற்கவில்லை. பேரனை மட்டும் ஏற்றுக்கொண்டு மகளைத் துரத்தினார். ஒரு தோழியின் வீட்டில் ஃப்ளாரென்ஸ் தஞ்சமடைந்தார்.













Add Comment