அமர்நாத் இராமகிருஷ்ணன் தலைமையில் இந்தியத் தொல்லியல் துறையின் சார்பாக, மதுரையிலுள்ள கீழடியில் இரண்டு அகழாய்வுகள் நடத்தப்பட்டிருந்தன. அது தொடர்பான ஆய்வறிக்கையையும் ஈராண்டுகளுக்கு முன் அவர் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், சில விளக்கங்களைக்கோரி, அந்த ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது கீழடி கிராமம். இந்தக் கிராமம் ஒரு தொல்லியல் தளம் என்பதை 2014–ஆம் ஆண்டில் கண்டறிந்தார் அமர்நாத் இராமகிருஷ்ணன். அப்போது அவர் ஏஎஸ்ஐ என்று அழைக்கப்படும் இந்தியத் தொல்லியல் துறையில் (Archaeological Survey of India) கண்காணிப்பாளராக இருந்தார். அவரது தலைமையில் 2014-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை, இரண்டு அகழாய்வுகள் நிகழ்த்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்தியத் தொல்லியல் துறை ஒரு முறை ஆய்வை மேற்கொண்டது. மத்திய அரசு அமர்நாத்தை இடமாற்றம் செய்தபிறகு, தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறை அங்கு தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது.
தன்னுடைய அகழாய்வு தொடர்பான 982 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கையை ஜனவரி மாதம், 2023-ஆம் ஆண்டில் ஏஎஸ்ஐ-யிடம் சமர்ப்பித்தார் அமர்நாத். அந்த அறிக்கையின் முக்கியமான முடிகளைப் பின்வருமாறு பட்டியலிடலாம்.













Add Comment