Home » தீர்ப்புகள் திருத்தப்படும்!
இந்தியா

தீர்ப்புகள் திருத்தப்படும்!

கடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடையக் காரணமாக இருந்தவற்றில் முக்கியமானது மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லியின் முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா உள்பட இருபத்து மூன்று பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆம் ஆத்மி செயல்படுத்திய மதுபானக் கொள்கையில் எந்த ஒரு சதித் திட்டமோ, குற்றவியல் நோக்கமோ இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மேலும், இவ்வழக்கைத் தொடுத்த சிபிஐயைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

2012ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால். இக்கட்சியின் முதன்மைக் கொள்கையாக ஊழல் ஒழிப்பை அறிவித்தார். கட்சி தொடங்கிய பின் சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் முதல்வராகப் பதவியேற்றார்.

ஆனால் அது தொங்கு சட்டசபையாக அமைந்துவிட்டதால் அறுபது நாள்கள்கூட ஆட்சி நீடிக்கவில்லை. அடுத்த இரண்டாண்டுகள் கவர்னர் ஆட்சி நடைபெற்றது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சியமைத்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!