நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கூட்டம், அவர்களை அடக்க கண்ணீர் புகை, பற்றி எரியும் பாராளுமன்றம், போலீஸால் கொல்லப்பட்ட சில பிணங்கள். இப்படி ஒரு வார காலமாகப் போர்க்களமாய்க் காட்சியளிக்கிறது நைரோபி- கென்யாவின் தலைநகரம். இந்த போராட்டத்தை முன் நின்று நடத்துபவர்கள் ஜென்-z எனப்படும் இளைஞர்கள். இவர்களின் கோபத்திற்கும் வேகத்திற்கும் தூண்டுகோலாக இருப்பது ஒரு நிதி மசோதா.
போராட்டத்தைக் கண்கூடாகப் பார்த்தும்கூட நாட்டின் அதிபர் ரூடோ, “போராடும் மக்களிடையே குற்றவாளிகள் சேர்ந்துள்ளனர், அவர்கள் நாட்டின் துரோகிகள் “ என்கிறார். மேலும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர நினைக்காமல், ராணுவத்தை இறக்கி விட்டார். அவர் பேச்சை ஜென்-z காதில் கூட வாங்கவில்லை. அடுத்த பன்னிரண்டு மணி நேரம் அதே கலவரம், ரத்தம், சத்தம் என்று போராட்டம் இன்னும் தீவிரமாக தொடர்ந்தது. இதனால் இருபதுக்கும் மேற்பட்ட மக்களின் இறப்பும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததும் நிகழ்ந்தது.
ஹிட்லர் போல் பேசிய ரூடோ நம்மூர்ப் பன்னீர்செல்வம் போலக் கதையைத் திடீரென முற்றிலும் மாற்றி, தான் நிதி மசோதாவை ரத்து செய்வதாக அறிவித்தார். பன்னிரண்டு மணி நேரத்தில் ரூடோ மாறியதன் காரணத்தை ரூடோவிடம் தான் கேட்க வேண்டும்.
Add Comment