Home » செத்தால் கிடைக்குமா நீதி?
குற்றம்

செத்தால் கிடைக்குமா நீதி?

உண்ணாவிரதத்தில் மருத்துவ மாணவர்கள்

சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் கொல்கத்தா மருத்துவர் விவகாரம் முடிவுக்கு வரவில்லை. ஆர்.ஜே.கர் மருத்துவமனையைச் சேர்ந்த பத்து பயிற்சி மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கின்றனர். போராட்டம் கடந்த ஞாயிறன்று ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது. இதில் ஈடுபட்ட மருத்துவர்களின் உடல்நிலையும் மோசமடைந்து வருகிறது.

தங்கள் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை ஒரு பெரிய அட்டையில் ஒட்டி அனைத்து ஊடகங்களுக்கும் தெரியும் வண்ணம் ஏந்திப் பிடித்துப் போராட்டத்தைத் தொடர்கின்றனர். அது மட்டுமன்றி இந்த நடவடிக்கைகளைச் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பியும் வருகின்றனர். வேகம் இன்றி சென்று கொண்டிருந்த நடவடிக்கைகள் இந்த உண்ணாவிரதத்தின் மூலம் சூடு பிடித்துள்ளன. அறுபது நபர்கள் தற்காலிகப் பணிநீக்கம் அல்லது நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி அதிகாலை ஆர்.ஜே.கர் மருத்துவமனையில் ஒரு பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அரசின் மெத்தனத்திற்கு கண்டனம், உடனடித் தீர்வு, மருத்துவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடந்து வருகிறது. நியாயம் கிடைக்கும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் மம்தா அளித்த வாக்குறுதி என்னாயிற்று, இவ்வளவு நாட்களுக்குப் பிறகும் அவரது மௌனத்திற்கான காரணம் என்ன என்று தொடர்ந்து கேள்வி எழுந்துள்ளது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!