Home » என் பெயர் குக்குக்கூகூ குக்குக்கூட்
சமூகம்

என் பெயர் குக்குக்கூகூ குக்குக்கூட்

உன் பேரென்ன என்று அந்தச் சிறுமியிடம் கேட்கிறார் ஒரு யூட்யூபர். அவள் ‘கூகூகுக்கூக்கு கூகூகுக்கூ கூகூகுக்கூக்கு கூகூகுக்கூ’ என்று இனிமையான, வெட்கம் கலந்த குரலில் இசைக்கிறாள். அதே கேள்வி மற்றொரு சிறுமியிடம் கேட்கப்படுகிறது. தன்னுடைய பெயர், ‘குக்குக்கூகூ குக்குக்கூ’ என்கிறாள். விளையாட்டல்ல, நிஜமாகத்தான். அவ்வூரில் இருக்கும் சுமார் 750 பேருக்கும் இதுபோன்ற இசைப் பெயர்கள் உள்ளன. அவ்வூரில் இந்தப் பெயர்களால்தான் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறார்கள். சில பெயர்களை உச்சரிக்க ஒரு நிமிடம் கூட ஆகிறது.

மேகாலயாவின் கிழக்குக் காசி மலைத்தொடரில் உள்ள கிராமம் காங்தாங் (Kongthong). சுற்றிலும் பச்சைப்பசேலென்ற மலைகள் சூழ, ஷில்லாங்கில் இருந்து சுமார் அறுபது கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளது. இருந்தாலும் வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை என்பதால் அங்கு சென்றடைய மூன்று மணி நேரமாவது ஆகும்.

காற்றில் மிதந்துவரும் விநோதமான முரலொலிகள் (hummings) காங்தாங்கை அடைந்துவிட்டதை அறிவிக்கின்றன. பெரும்பாலான முரல்கள் கூர்மையாகவும், ஆழமாகவும், கனமாகவும் இருக்கின்றன. அந்த மலைக்காட்டின் சூழலுக்கு அவ்விநோத ஒலிகள் ஒருவித அமானுஷ்ய உணர்வையும் அதிர்வையும் ஏற்படுத்துகின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!