கிராமத்தின் மக்கள்தொகை மொத்தமே சுமார் 500 பேர்தான். 50 முதல் 60 வீடுகள். ஊரின் மொத்தப் பரப்பளவு தோராயமாக இரண்டு கிலோமீட்டர் அல்லது அதற்குச் சற்றே குறைவு. சுருக்கமாகச் சொன்னால் கொட்டாப்புளியனூர் ஒரு குக்கிராமம். 500 பேரில் சுமார் 400 பேர் இந்த ஊரில் வசிப்பதே இல்லை. சேலத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கிறார்கள். எப்போதும் ஊருக்குள் இருப்பது பெரும்பாலும் வயதானவர்களே.
கிராமத்தில் ரேஷன் கடை, பால் சொஸைட்டி, பள்ளிக்கூடம், காவல் நிலையம், வங்கி எதுவுமே கிடையாது. அவ்வளவு ஏன், ஒரு மளிகைக்கடை கூடக் கிடையாது. அடிப்படைவசதிகள் எதுவும் இல்லாத நிலையிலும் இந்தக் கிராமம் இன்றும் செழிப்பாக இருக்கிறது. காரணம், அவரவர் வீட்டினுள் எல்லாவிதமான வசதி,வாய்ப்புக்களும் நிறைந்திருக்கின்றன.
லட்சக்கணக்கில் செலவு செய்து வாரக்கணக்கில் இங்கு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. வழக்கு,விவகாரங்கள் எதுவாக இருந்தாலும் அவர்களுக்குள்ளாகவே பேசி தீர்த்துக்கொள்கிறார்கள். அரசாங்கம் உள்ளிட்ட யாரையும், எதற்காகவும் எதிர்பார்க்காத சுயசார்பு அடைந்த மக்கள் இங்கு வசிக்கிறார்கள். இவையெல்லாம் எப்படிச் சாத்தியம்? யார் முன்னின்று இதையெல்லாம் செய்கிறார்கள்?














Add Comment