கேள்வியும் நானே… பதிலும் நானே…
பதில் சொல்வது எளிது. கேள்வி கேட்பதுதான் கடினம். சரியான கேள்விகளைக் கேட்கப் பழகிவிட்டாலே எதையுமே எளிதாகக் கற்க முடியும்.
இதுவரையிலான ப்ராம்ப்ட்களில் குட்டிச்சாத்தானிடம் நாம் கேள்வி கேட்டோம். அது பதில் சொன்னது. மாக் இண்டர்வ்யூ மட்டும் இதற்கு விதிவிலக்கு.
இப்போது நாம் கேள்விகளைப் பெறப்போகிறோம்.
கேள்விகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது? பல்வேறு சூழல்களில் இது கைகொடுக்கும்.
உதாரணமாக, தேர்வுக்குத் தயாராவது. மாணவர்கள் பாடமொன்றைப் படித்துமுடித்த பின், பயிற்சிக் கேள்விகள் தயாரிக்கும் போது எல்.எல்.எம்.களைப் பயன்படுத்தலாம்.
Add Comment