Home » குட்டிச்சாத்தான் வசியக் கலை – 20
குட்டிச்சாத்தான் வசியக் கலை தொடரும்

குட்டிச்சாத்தான் வசியக் கலை – 20

ஏறுமுகத்தில் ஏஐ

பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு அதிகாரி ஒருவருக்கு எழுதும் விண்ணப்பமும் வெவ்வேறு மொழிநடைகளில் இருக்குமல்லவா?

சாட்ஜிபிடி, க்ளாட் போன்ற எல்.எல்.எம்களிலும் இது போன்ற மொழிநடை மாற்றத்தைக் கொண்டுவர முடியும். நீங்கள் எந்தத் தொனியில் பதிலை எதிர்பார்க்கிறீர்கள் என்று ப்ராம்ப்ட்டில் கூறிவிட்டால்போதும். மற்றதைக் குட்டிச்சாத்தான் பார்த்துக்கொள்ளும்.

ப்ராம்ப்ட்களில் இதை “டோன்” (tone) என்கிறார்கள். நமக்கு எந்த டோனில் பதில் வேண்டுமென்பதைக் குறிப்பிடமுடியும். ப்ராம்ப்ட்டின் ஐந்து பாகங்களில் டோன் என்பதும் ஒன்று என்று ஏற்கனவே பார்த்திருந்தோம். இந்த அத்தியாயத்தில் பல்வேறு விதமான டோன்கள் குறித்துத் தெரிந்துகொள்வோம்.

“ஃபார்மல்” என்றொரு டோன் உள்ளது. இது அலுவலக நடைமுறைகளில் பயன்படுத்தப்படும் டோன். பாடப்புத்தகங்களும் இந்த ஃபார்மல் டோனில் தான் இருக்கும். எங்கெல்லாம் உணர்வை விட செய்தி முக்கியமோ அங்கெல்லாம் ஃபார்மல் டோன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!