கென்யாவின் வடக்கு மாகாணத்தில் சம்புரு என்றொரு மாவட்டம் இருக்கிறது. அங்கு உமோஜா (Umoja) என்ற கிராமம் உள்ளது. இதற்கு சுவாஹிலி மொழியில், ஒற்றுமை என்று பொருள். இங்கே ஆண்கள் நுழைய அனுமதி இல்லை. இங்கே வாழும் ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும் பல வலிமிகுந்த போராட்டங்களும், வேதனைகளும் உள்ளன.
1990-களின் தொடக்கத்தில், ரெபெக்கா லோலோசோலி (Rebecca Lolosoli) என்ற சம்புரு பெண் தன் கணவரால் கடுமையான கொடுமைகளை அனுபவித்தார். ஒரு கட்டத்தில், வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். தன்னைப் போன்ற மற்ற பெண்களுடன் சேர்ந்து ஒரு புதிய கிராமத்தை உருவாக்க முயற்சி செய்ததின் விளைவுதான் உமோஜா. இது கென்யாவில் “ஆண்கள் இல்லாத கிராமம்” என அறியப்படுகிறது.
சம்புரு பழங்குடியினர் மசாய் பழங்குடியினரின் ஒரு பிரிவினர் என்று கருதப்படுகிறது. இவர்களின் வாழ்க்கை முறையும் கலாசாரமும் பல நூற்றாண்டுகளாக மாறாமல் இருந்து வருகிறது. சம்புரு சமூகம் பிதிர்சமூக (பாட்ரியார்க்கல் – Patriarchal)அமைப்பைக் கொண்டுள்ளது. அதாவது ஆண்கள் மட்டுமே எதற்கும் தகுதியானவர்கள் என்பது இவர்களது சித்தாந்தம். சொத்து, இவர்கள் பெயரில் மட்டுமே இருக்கும். முடிவுகளும் அப்படியே. பெண் என்பவள் இவர்களைப் பொறுத்தமட்டில் சொத்துப் பட்டியலில் ஒன்று.
Add Comment