சரியான குளிர். இந்த வருடத்துக்கான பனியின் பொழிவு வழக்கத்தை விடவும் சில தினங்கள் முன்பாகவே தொடங்கி விட்டிருக்க வேண்டும். நகரம் முழுவதுமாகத் தண்மையின் பிடியில் ஆழ்ந்திருந்தது. மலைவாசஸ்தலம் என்றாலே என்னவோ சுற்றுலா வந்து திரும்பினால் போதும் என்பதான மனோநிலைதான் பலருக்குமுள்ளது. நுழைந்து கிறங்குவதெல்லாம் முதல் இரண்டு தினங்களுக்குத் தான். நாலே நாட்களில் அலுத்துக் கொட்டும். ‘எப்படா கீழே இறங்குவோம்?’ என்று தலைதெறிக்க வளைவுகளில் நீந்துவார்கள். பலரும் இப்படியான இரட்டை மனோபாவத்தை நிரந்தரம் செய்து கொண்டவர்கள் தான். எருமை மாடு சகதியுட் புகுகிறாற் போல் ஓரிடத்தை ஆக்கிரமித்து விட்டு அதே இடத்தைக் காலடிகளால் கந்தலாக்கிய பிற்பாடு ஒன்றுமே நடவாத பாவனையில் திரும்பிச் செல்பவர்கள். மனோகருக்கு இப்படியான மனிதர்களைப் பார்க்கும் போது வினோதமாய்க் கோபம் உருக்கொள்ளும். bull-shit! சற்றே உரக்கத் தான் சொல்வான்.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
Add Comment