ஒரு நாட்டில் ஜனநாயக ஆட்சியோ, சர்வாதிகார ஆட்சியோ, கொடுங்கோல் ஆட்சியோ நடக்கலாம். ஆனால், அந்த நாட்டினை நிர்வகிக்க, குழப்ப நிலையிலிருந்து மீட்க, இறைமை அதிகாரத்தை வரையறுக்க, நிகழ்கால மற்றும் வருங்காலச் சந்ததிகளின் விருப்பு, வெறுப்புக்களைக் கட்டுப்படுத்த தேவை.. அரசியலமைப்பு.
அரசியலமைப்பின்றி ஆட்சி செய்வது மரணமின்றி வாழ நினைப்பது போல இயலாத காரியம். பொதுவாக அரசியலமைப்புச் சட்டத்தை மீறி குற்றம் புரிவோர் அதன் தாக்கம் மற்றும் விளைவின் காரணமாகச் சிறையில் அடைக்கப்படுவர் . தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்படுவர். இப்படி விடுதலையானவர்களில் பலர் வெளியே வந்த பின்னர் நல்ல மனநிலையோடு வாழ முடிகிறதா ?
Add Comment